Article by: Rathai Muthu
ஒவ்வொரு வாரமும் பத்திரிக்கைகளில் பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடியில் கழிவுகிடங்கில் சேரும் கழிவுகளை எரிப்பதை பற்றிய பிரசுரங்களைப் படித்திருப்போம். அதில் 60 சதவிகிதம் கரிமகழிவுகள் (organic waste) வீணாக்கப்படுவது வருந்தத்தக்க விஷயம். அவற்றை வீணாக்காமல் சுலபமாக நிலத்திற்கு உரமாக்கலாம்.

கரிம கழிவுகள் (organic waste) என்பது அடுப்பங்கரையில் கிடைக்கும் மீதமான உணவுகள், இலைகள் மற்றும் பூக்கள் என்ன ஆகும். உரம் என்பது கரிம கழிவுகளை செயல் முறைகளுக்கு உட்படுத்தி சத்து நிறைந்த மணலை உருவாக்குவதே ஆகும். இது அழுகும் நிலையில் இருந்து மாறுபட்டது ஆகும். அழுகும் பொருட்களில் கெட்ட வாசனையும் பூஞ்சைகளும் கலந்து இருக்கும். அதற்கு மாறாக உரம் என்பது மிக மெதுவாக கழிவுகளில் நடக்கும் சிதைவு ஆகும். இதே செயல்முறைதான் காடுகளில் நடைபெறுகிறது. காடுகளில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக விழும் இலைகள் மிக மெதுவாக உடைந்து மண்ணோடு கலக்கும். இதுவே காடுகளில் ஒரு விதமான மண் வாசனையை கொடுக்கும்.
உரத்தின் அறிவியல் பின்புலம்
கரிம கழிவுகள் உரம் ஆதலின் போது சிதைந்து நைட்ரஜன் மற்றும் கார்பனை கொடுக்கிறது. நைட்ரஜன் மற்றும் கார்பன் சமமான நிலையில் உள்ள போது நமக்கு தரமான உரம் கிடைக்கிறது. நைட்ரஜனின் அளவு அதிகமானால் அழுகும் வாடை அடிக்கும்.
கார்பனின் அளவு அதிகமானால் உரத்தில் வறட்சியும் சத்து இன்றியும் காணப்படும். பச்சை நிறக் கழிவுகளில் இருந்து நைட்ரஜன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக பழங்களின் தோல்கள் மற்றும் காய்கறிகள், பூக்கள் மற்றும் நீண்ட உணவுப் பொருள்கள்.
பழுப்பு நிற கழிவுகளிலிருந்து கார்பன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக மரங்களிலிருந்து விழும் உலர்ந்த இலைகள், துண்டாக்கப்பட்ட அட்டை தூள்கள், பழுப்பு நிற தேங்காய் துண்டுகள்(தேங்காய் ஓடுகள் அல்ல).
ஏரோபிக் (aerobic) அல்லது அன் ஏரோபிக்(unaerobic) முறையில் உரமாக்கலாம். காற்றினை உபயோகப்படுத்தி உருவாக்குவதே மிகச்சிறந்த சுலபமான வழி. உரமாதல்(Composting) காற்று மற்றும் கலந்து விடுவதன் மூலம் நடைபெறும்.
வீட்டில் உரம் தயாரித்தல்

அதில் ஒரு அண்டா(drum) , பெரிய வாளி(big size bucket) அல்லது டெரக்கோட்டா பாத்திரம்( terracotta pot) என உங்களிடமுள்ள தகுந்த அளவிலான பாத்திரம் எடுத்து அதில் சீரான இடைவெளியில் துளைகள் இடவும்.
அதில் பச்சை நிற கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறை சேர்க்கவும். மிக சீக்கிரம் உரமாக கழிவுகளை மிக சிறிதாக நறுக்கி துண்டுகளாக்கி சேர்க்கவும்.

அதன்மீது பழுப்பு நிற கழிவுகளை பரப்பவும். இவ்வாறாக பச்சை மற்றும் பழுப்பு நிறப் கழிவுகளை அடுக்கடுக்காக சேர்க்கவும். இறுதியாக பழுப்பு நிற கழிவுகளை இட்டு அந்தப் பாத்திரத்தை இறுக மூடவும்.
இருக்க மூடுவதினால் சிறு பூச்சிகள் உள்ளே நுழைவது தடுக்கப்படும். கழிவுகள் உள்ள பாத்திரத்தினை ஒரு தட்டின் மீது வைக்கவும். கழிவுகளிலிருந்து வழியும் திரவம் அந்தத் தட்டில் சேமிக்கப்படும்.
கழிவுகள் அவையிலிருந்து உறவின் போது வடியும் திரவத்தில் மிக அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த திரவ உரத்தில்(liquid fertilizer) ஒன்றுக்கு 30 மடங்கு தண்ணீர் சேர்த்து நிலத்தில் உபயோகப்படுத்தவும்.
இந்த திரவ உரத்தில் தயிர் மற்றும் பஞ்சகவ்யா (பசு உரம்) கலந்தால் அது உரத்திற்கு மிகச்சிறந்த வினையூக்கியாக செயல்படும்.
இவ்வாறாக பச்சை மற்றும் பழுப்பு நிற கழிவுகளை சேர்த்துக் கொண்டே வரவும். ஒரு பாத்திரம் நிறைந்தவுடன் அடுத்த பாத்திரத்தில் இதே போல செய்யலாம். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் உரக்கலவை சேர்ந்துவிடும். பின்பு ஆறு அல்லது எட்டு வாரங்களில் மண்வாசனை உடனான பழுப்பு மற்றும் தங்க நிறத்திலான உரம் செடிகளுக்கு தயாராகிவிடும்.
உரம் தயாரிக்க தேவை அற்றவை
தேங்காய் ஓடுகள் மாங்கொட்டை மற்றும் நிலக்கடலை ஓடுகள் இவை உரமாக ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும். நாள் போக்கில் கெட்ட வாடையும் அடிக்க ஆரம்பிக்கும். பால் பொருட்களை சேர்ப்பதால் எலி முதலான சிறு விலங்குகளை ஈர்க்கும். எலும்புகள் சேர்ப்பதால் சிதைவுற நிறைய நாட்கள் பிடிக்கும் அதனால் அவை தேவையற்றவை.
உடைந்த முட்டை ஓடுகளையும் டீ மற்றும் காபி தூள் களையும்நேரடியாக மண்ணில் இடலாம்.
பழுது நீக்குதல்( Trouble shooting)
உரம் ஈரமாகவோ அல்லது வறட்சியாக இருந்தால் அதில் இருந்து மண் வாசனை வரும். உங்கள் உர கலவையில் நீர்அதிகமாக இருந்தால் அதிக அளவு நைட்ரஜன் உள்ளது என்று அர்த்தம். சரி செய்ய பழுப்பு நிற கழிவுகளை சேர்க்கவும். உரக்கலவை வறண்டு இருந்தால் பச்சை நிற கழிவுகளை சேர்க்கவும்சேர்க்கவும். நடைமுறையில் அதிக அளவில் நீர் உரிய உரங்களை பிரச்சனைக்கு காரணம் ஆகிறது.
முயற்சி அதிகம் தேவையில்லை
உரம் தயாரித்தல் இற்கு அதிக இடமும் நேரமும் தேவையில்லை. ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் போதும் . மண்வாசனையை மண்ணுக்கு நாம் தரும் சிறந்த பரிசு. ஆரோக்கியமான தாவரங்களுக்கு நாம் தரும் பரிசு ஆரோக்கியமான உரமே ஆகும்.

