Imagine you found a bucket of sand but it looked different ..Under the sunshine it glittered .You became curious..Immediately you rushed to see it under a magnifying glass . Phew! for every handful of sand there was atleast a pinch of diamonds . Would you think of throwing it away ?……
Everywhere all over the world each of is dumping money/wealth/precious resource to landfills. This post is a reminder of the fact. Lets us no longer remain unaware of this. Wealth /money/resource what is that we are talking about ?
So you have found the treasure in your daily dump. Take Action , Roll your sleeves and start playing with soil. Happy Composting!
International Compost Awareness Week (ICAW) is the largest and most comprehensive education initiative of the compost industry. It is celebrated nationwide and in other countries each year during the first full week of May. Started in Canada in 1995, ICAW has continued to grow as more people, businesses, municipalities, schools and organizations are recognizing the importance of composting and the long-term benefits from organics recycling.
The goal of the program is to raise the awareness of the public regarding the benefits of using compost to improve or maintain high quality soil, to grow healthy plants, reduce the use of fertilizer and pesticides, improve water quality and protect the environment. The program includes a poster contest, programs at schools and activities and events promoted through governments, public municipalities and local businesses nationwide.
Join us and contribute by creating posters on Composting . If you already a patron of composting send your composting pics and be showcased here at RecycleMithra. Send your entries to recyclemithra@gmail.com
Bored with the usual weekend hangout routine, we signed up for a beach clean up with DEAP(Doha Environmental Protection Action Project)Qatar, Facebook group. This was the team’s #110 clean up . 7 kms away from the historical tourist site Fort Zubara in Qatar, it was a rather bumpy ride to the serene looking beach with lots of fascinating hues of Qatar fauna. With the weather taking a dramatic turn up it was like a cool breezy late winter afternoon. A first look at the beach we were surprised that it appeared clean . We geared up with our trash bags and the Jose who leads the clean up gave few instructions . And we started exploring the beach looking for anything plastic . An abandoned fishing net was the first one which caught the attention. With very few people reaching this beach it dint take long to realise that most of the plastic trash was to be found along the bed of green beachside grasses.
Taking a closer look at the plants , it was a sore sight to see bottle caps, bottle rings, aluminuim cans,ketchup sachets and bottles in all sizes . sometimes buried deep. We fished out a masking tape and even a cloth hanger. What was it doing in a beach?
ketchup
bottle
cap
small bottle
is it a bag?
how old are u ?
fishing the fishing net
bird carcass with plastics toy bricks
masking tape
bottle cap
big bottle
The only comfort was the gentle breeze . Every piece of plastic unearthed was just reminding of our guilty actions . Dumping plastic irresponsibly. We started at 2 30 pm and winded up by 4 30 pm . As each of us bought the trash bags to line up it was almost 50 bags. Almost 600 kg from a nearly clean looking beach. Satisfied doing our part we left the team promising to meet at another clean up and discover an unexplored part of Qatar.
Riding back home , it was a sad thought that stuck the mind that even if the entire world decides to pick up a bag to start picking plastic, it will take years to unearth the 6.3 billion metric tons plastic waste piled up . And we keep dumping every minute. To write it in numbers 6300000000000 kg of plastic waste remains to be picked up. If a team of 25 like us set out to clean up for 2 hrs a day daily it will take 10000000000 days to pick it up . Or 27397260.27397 years . BIG DATA. 6.35029 Billion kg is our daily plastic trash production.
Just like we wrote in this sand , We keep saying Say No To Plastics just to be washed away by the next tide. Rethink Plastics, Do we really need it in our daily lives? Let us REFUSE unnecessary single use plastic. REDUCE the usage of many plastic items and REUSE before trashing it . Lets Dispose plastic waste RESPONSIBLY. Only when the buying stops , the making too.
King Midas turned everything into Gold after he got a boon. We know what happened to him. We the Modern day Midas-es turning every spoon and cup to plastic…
It takes the first step to climb huge mountains . Given the huge problem what is that we can do now. Today is that day .. Is all plastic bad ? or is it the way we use it . Here is a list of our everyday plastics. One at a time .. Which was the one you decided to let go…
நமது இயற்கை சூழலில் பிளாஸ்டிக்கின் கலப்பு அதன் எல்லை தாண்டி செல்கிறது. இது நமக்கும் மற்ற பிற உயிரினங்களுக்கும் நன்மை தரவல்லது அல்ல. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவு தற்போது நமது சிந்தனைக்குரிய ஒன்றாகும். பிளாஸ்டிக் மாசு கடல்வாழ் உயிரினங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
மைக்ரோ
பிளாஸ்டிக் என்பது என்ன?
நவீன காலத்தில் அழகு சாதன பொருட்களில் இதன் கலப்பு அதிகமாக உள்ளது. பிளாஸ்டிக் சிறிதாக சிறிதாக உடைந்து மிக மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகளாக மாறுவதே மைக்ரோ பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக் உடைந்து 5 மி மீ அளவுள்ள நுண்ணிய துகள்கள் ஆவதே மைக்ரோ பிளாஸ்டிக். சிலர் 1 நானோ மீட்டர் அளவு உள்ள பிளாஸ்டிக்கை மைக்ரோ பிளாஸ்டிக் என்கின்றனர். பிளாஸ்டிக் அழிவு அடைய நிறைய காலங்கள் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே இது நுண்ணிய துகள்களாக உடைகிறது.
மைக்ரோ
பிளாஸ்டிக் நம் சுற்றுச்
சூழலில் மிக எளிதாக பரவுகிறது.
செயற்கை
நெசவு உற்பத்தித் தொழிற்சாலைகளில்
இருந்து அதிக அளவு மைக்ரோ
பிளாஸ்டிக் வெளி வருகின்றன.
மேலும்
சூரியன், காற்று
மற்றும் நீர் ஆகியவை இயற்கை
முறையில் பிளாஸ்டிக்கை
உடைக்கிறது.
நாம்
சுவாசிக்கும் காற்றில் கூட
மைக்ரோ பிளாஸ்டிக் கின்
துகள்கள் கலந்து உள்ளன. நாம் உடுத்தும் நைலான் துணிகளில் உள்ள இழைகள் காற்றில் பறந்து சுவாசத்தில் கலக்கிறது. சலவை இயந்திரங்கள் மூலம் நைலான் துணி துவைக்கும் போது சிறிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கழிவு நீரில் கலந்து மண்ணில் கலக்கிறது.
மைக்ரோ பிளாஸ்டிக் உயிர்களுக்கு பாதிப்பை உண்டாக்குமா?
யாருக்கும் துல்லியமாக தெரியவில்லை மைக்ரோ பிளாஸ்டிக் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று. இன்றளவும் அதற்கு என தனிப்பட்ட ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. எடுத்துக்காட்டாக 0.15 மி மீ or 150 மைக்ரான்ஸ்(microns) அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலில் நுழையும் பொழுது எவ்வித பாதிப்பும் உண்டாக்குவது இல்லை. ஆனால் அதற்கு மேற்பட்ட அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக் விலங்குகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளின் உடலில் நுழைந்து அதன் சீரண உறுப்புகளில் உள்ள அமிலத்துடன் வினைபுரிந்து கொடிய நச்சுத்தன்மை உள்ள கழிவாக வெளியேற்றப்படுகிறது. நானோ பிளாஸ்டிக் மீன்களின் மூளையின் செயல்பாட்டை தொந்தரவு செய்து அதன் குணங்களில் மாறுபாட்ட தன்மையை உண்டுபண்ணுகிறது.
மைக்ரோ பிளாஸ்டிக் எப்படி மனித உடலில் நுழைகிறது?
மூன்று
வழிகளில் பிளாஸ்டிக் நம்
உடலில் நுழைகிறது.
கடல்
உணவுகள் மூலம்
நம் அன்றாட உணவுப் பட்டியலில் மீன் உணவுக்கு என்று தனி இடம் உண்டு. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் நமது உணவிலும் நிச்சயமாக கலந்து உள்ளது.
வீட்டில்
உள்ள உபயோகப் பொருட்கள்
மற்றும் காற்றின் மூலம்
நமது வீட்டில் மட்டுமே114 வகையான மைக்ரோ பிளாஸ்டிக் நாம் உண்ணும் உணவுத் தட்டுகளில் படிந்து நாம் உண்ணும் உணவின் மூலம் உடலில் நுழைகிறது. நாம் சுவாசிக்கும் காற்றின் மூலமும் நம் உடலில் நுழைகிறது என புதிய ஆராய்ச்சி சொல்கிறது. ஆண்டுக்கு 13,000 முதல் 68,000 வரையிலான மைக்ரோ பிளாஸ்டிக் நம் உடலில் நுழைகிறது.
நீரின்
மூலம்
கடல் மற்றும் ஏரி போன்ற நீர்நிலைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. நாம் குடிக்கும் தண்ணீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது. பாட்டில்தண்ணீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது என்பது நிச்சயமான உண்மை.
9 நாடுகளில் உள்ள 259 பாட்டில் தண்ணீரை ஆராய்ச்சி செய்தனர். அதில் 11 பிராண்டட் கம்பெனி அக்வஃபினா, நெஸ்ட்லே, ஏவியன் மற்றும் பிற பாட்டில் தண்ணீர் கம்பெனிகளும் அடங்கும். அவர்கள் கண்டுபிடித்தது அனைத்து நீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்து உள்ளது என்பதே. 259 பாட்டில் தண்ணீரிலும் 93% மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது.100 microns (0.1 மில்லி மீட்டர்) அளவிலான பிளாஸ்டிக் ஒவ்வொரு ஒரு லிட்டர் தண்ணீரிலும் சராசரியாக 10.4 சதவிகிதம் கலந்துள்ளது. இதிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரின் மூலம் சராசரியாக ஒரு வருடத்திற்கு பத்தாயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் உங்கள் உடலில் நுழைகிறது.
இனி நாம் என்ன செய்யவேண்டும்?
Source : Wikipedia
உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக்கின் அளவை குறைப்பதன் மூலமே இதற்கான தீர்வை கண்டறிய முடியும். எதிர்கால சந்ததியினரை இதிலிருந்து காப்பதற்கான ஒரே வழி பிளாஸ்டிக்கின் உற்பத்தியையும் அதன் தேவையையும் குறைப்பதே ஆகும். எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக்கினால் கட்டிக் கொடுக்கப்படும் உணவுப் பண்டங்களை வாங்காமல் இருப்பது, ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தும் பாட்டில் தண்ணீரை வாங்காமல் இருப்பது, straw உபயோகப் படுத்தாமல் இருப்பது.
திடக்கழிவு
மேலாண்மை என்பது வீடுகள்,வணிகவளாகங்கள்,
தொழிற்சாலைகளில்
இருந்து கிடைக்கும் தேவை
இல்லாத பயன்படுத்தப்பட்ட
திடப்பொருள்களை சரியான
முறையில் மறுபடியும்
உபயோகிப்பதற்கான வழிவகைகளைச்
செய்வதாகும் .
திடக்கழிவுகளால்
சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
உதாரணமாக
காகிதம்,
ரப்பர்,பிளாஸ்டிக்
பொருள்கள் ,
கண்ணாடிகள்
, தோல்
பதனிடும் தொழிற்சாலை கழிவுகள்
போன்றவை ஆகும்.
திடக்கழிவுகள்
அதிக அளவில் வீடுகள்,
அலுவலகங்கள்
, மருத்துவமனைகள்
, கல்வி
நிறுவனங்கள் ,
தொழிற்சாலைகள்
, வேளாண்
கழிவுகள் ,
நகராட்சி
கழிவுகள் ஆகியவற்றில் இருந்து
கிடைக்கப்பெறுகிறது.
திடக்கழிவுகளின் வகைகள்
சிதைவடைவன
இவை
நுண்ணுயிரிகளால் எளிதில்
சிதைவடையும்.(எ.கா)
இறந்த
தாவரங்கள் ,
விலங்குகளின்
உடல்கள் மற்றும் காய்கறி
கழிவுகள்
சிதைவடையாதவை
இவை
நுண்ணுயிரிகளால் எளிதில்
சிதைவடையாது.(எ.கா)
பிளாஸ்டிக்
, டயர்கள்,
கண்ணாடி
மற்றும் உலோகங்கள்
சாம்பல்
மரக்கட்டை,
நிலக்கரி
போன்றவை எரிபொருளாக பயன்படுத்தும்
போது கிடைக்கும் சாம்பல்
ஆகும்.
கட்டுமான
திடக்கழிவுகள்
கட்டிடங்கள்
கட்டும் போதும் ,
இடிக்கும்
போதும் வெளிப்படும் கழிவுகள்
ஆகும்.(எ.கா)
கற்கள்
மற்றும் மின்சாதனப் பொருள்கள்
.
நச்சுத்
திடக்கழிவுகள்
இவை
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த
கழிவுகள் .(எ.கா)
உலோகங்கள்
(குரோமியம்
, பாதரசம்,
காட்மியம்
) மற்றும்
பூச்சிக்கொல்லிகள் ,
வெடிபொருள்கள்,
மருத்துவமனை
கழிவுகள் மற்றும் கதிரியக்கத்
தனிமக் கழிவுகள்
வேளாண்
கழிவுகள்
வேளாண்
பொருள்களை பயன்படுத்தியது
போக மீதம் உள்ளவை இந்த கழிவுகள்
.(எ.கா)
நெல்
உமி, தவிடு,
கரும்புச்சக்கை,
கரும்புத்தோகை,
சோளத்தட்டை,
பண்ணைக்கழிவுகள்,
தென்னைக்
கழிவுகள்
ஆனால்
இவற்றால் அதிக அளவில் பாதிப்புகள்
ஏற்படுவதில்லை .
கழிவுநீர்
சுத்திகரிப்பு கழிவுகள்
கழிவுநீர்
சுத்திகரிக்கும்
போது வெளிவரும் திடக்கழிவுகளாகும்.
திடக்கழிவுகளின் விளைவுகள்
இக்கழிவுகளை
எரிக்கும் போது காற்று
மண்டலத்தையும் ,
மண்ணில்
இடும் போது நிலத்தையும்
மற்றும் நீரினையும்
மாசுபடுத்துகிறது.
மருத்துவமனைக்
கழிவுகள் பல நோய்கள் ஏற்படக்
காரணமாகிறது .
காகிதக்
கழிவுகள் மற்றும் உலோகங்கள்
போன்றவற்றை மறுசுழற்சி
செய்யும் போது சுவாசக்
கோளாறுகள்,
கண்
எரிச்சல் மற்றும் இரைப்பை
தொற்று நோய் ஏற்படுகிறது .
குளோரின்
உள்ள திடக்கழிவுகளை எரிக்கும்
போது அதிலிருந்து வெளிவரும்
டையாக்ஸின் ,
ப்யூரான்
வாயுக்களை சுவாசிக்கும்
போது மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
நச்சுக்
கழிவுகள் உணவுச் சங்கிலி
மூலம் உடலில் சேமிக்கப்பட்டு
புற்றுநோய் உண்டாக்குகிறது
.
திடக்கழிவுகளை
சேகரித்து அவற்றை சுத்திகரிக்கும்
இடத்திற்கு எடுத்துவருதல்.
பிரித்தல்
திடக்கழிவுகளை
அவற்றின் தரம் வாரியாகப்
பிரித்தல்.(எ.கா)
சிதைவன,
சிதைவடையாதவை,
எரியும்
பொருள்கள் ,
எரியாதப்
பொருள்கள் எனப் பிரித்து
மறுசுழற்சி செய்தல்.
தூளாக்குதல்
திடக்கழிவுகளை
அரைத்து தூளாக்கி சுத்திகரிப்பு
செய்து பின்பு பயன்படுத்துதல்.
திடக்கழிவு
சுத்திகரிக்கும் முறைகள்
உயிரியல்
முறை
வெப்ப
முறை
உயிரியல்
முறை
இம்முறையில்
நுண்ணுயிரிகள்
முலம் திடக்கழிவுகள்
சிதைக்கப்படுகின்றன.
திடக்கழிவுகளை
பாக்டீரியாக்கள் மற்றும்
பூஞ்சைகளால் சிதைக்கப்பட்டு
உரமாகவோ அல்லது நிலத்திலோ
புதைக்கப்படுகிறது.
வெப்பமுறை
இம்முறையில்
திடக்கழிவுகளை வெப்பபடுத்தி
எரிபொருளாகவோ அல்லது எரித்து
சக்தியாகவோ மாற்றப்படுகிறது
.
திட்டக்கழிவு மேலாண்மையின் பயன்கள்
மக்களை
நோயிலிருந்து பாதுகாத்தல்
. மற்ற
பிற உயிர்களுக்கும் திடக்கழிவுகளால்
தீங்கின்றி பாதுகாத்தல்.
மறுசுழற்சி
செய்வதன் மூலம் மீண்டும்
அப்பொருள்களின் உபயோகத்தை
அதிகமாக்கல்.
மேலும்
இதன் முக்கியப் பணி சுற்றுச்சூழலை
நம் தலைமுறை தலைமுறைக்கும்
பாதுகாத்தலே ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இந்த உலகில் பிறப்பெடுத்த மற்ற ஜீவராசிகளை விட மனித குலமே இந்த தினத்தை கொண்டாட வேண்டிய மூலகாரணத்தை உருவாக்கியுள்ளது. மனிதனின் பகுத்தறிவு ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகள் பயன் அளித்தாலும். பல்லாயிரம் பக்க விளைவுகள் நம்மை தவிர அனைத்து உயிர்களையும் இயற்கையையும் சீரழித்தன. அப்பொழுது எல்லாம் அது தவறாக படவில்லை. மனிதனையும் பாதிக்கும் சூழல் உருவான பின் தான் சுற்றுச்சூழலின்அவசியம் உருவானது.
நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப ,கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள் ,புகை என்பன நீர் நிலைகள் மற்றும் வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச்சூழலை மனிதன் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அவசியம் என்பதை இவ்வுலகில் பலரும் உணர்வதில்லை. மரங்கள் இல்லை எனில் இங்கு நாம் இல்லை இதனாலேயே சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் மரங்களின் முக்கியத்துவம் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். தனது தேவைக்காக காடுகளை அழித்து விட்டால் அவ்விடம் பாலைவனம் தவிர வேறு ஏதும் இல்லை. மனிதகுல வளர்ச்சிக்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் காடுகளையும் இயற்கை வளங்களையும் மனிதன் திட்டமிட்டு காக்க வேண்டிய பொறுப்பு உடையவனாவான்.
மேலும் சுற்றுச்சூழல் தொடர்பாக காலநிலைமாற்றம், பூமி வெப்பமடைதல் ,ஓசோன் படலம் பாதிப்பு ,நன்னீர் வளம் ,சமுத்திரம், கடற்கரை பிரதேசங்கள்,காடழிப்பு ,உயிரியல்மாறுபாடு ,உயிரியல்தொழில்நுட்பம் ,சுகாதாரம் ,ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உபயோகித்த பொருட்களை மறுபயனீடு செய்வதன் மூலமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இந்த உலகில் பிறப்பெடுத்த அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக்க வேண்டும் என்பதில் நம் தலைமுறைக்கு இதனை தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
கழிவு கட்டுப்படுத்தல்(reduce)
மீள் உபயோகம்(reuse)
திருத்தி பயன்படுத்தல்(repair)
மீள் உருவாக்கம்(recycle)
கழிவு அகற்றம்(remove)
நம் முன்னோர்களின் வழியில் நாமும் அடுத்த சந்ததியினருக்கு இயற்கையோடு வாழும் இன்பமான வாழ்வை வாழ வகை செய்வோம் என்று இந்த சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்போம்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கை; சான்றோர் வாக்கு. நமது முன்னோர்கள் போகி கொண்டாடுவது என நம்மை பழக்கப் படுத்தியதற்கு முக்கிய காரணம் இயற்கைகையையும் அதன்சுற்றுச் சூழலையும் பேணி பாதுகாக்கவே என நாம் சிந்தித்தால் புரியும். பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான். பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.
பழைய துணி மற்றும் சில வகையான பொருள்களை எரிப்பதற்கு அறிவியல் பின்புலத்துடன் கூடிய பாரம்பர்ய காரணங்கள் பல உண்டு.. நாப்கின் புழக்கத்தில் இல்லாத அன்றைய நாள்களில், மாதவிடாய் தருணத்தில் பெண்கள் அந்த நாள்களுக்கென பிரத்யேகமான துணியை, துவைத்து துவைத்துப் பயன்படுத்துவர். குழந்தைகளைத் தாலாட்டும் தொட்டில் முதல் அன்றாட பயன்பாடுகள் பலவற்றிலும் பெண்களின் ஆடைகளே அதிக புழக்கத்தில் இருந்தன. அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். ஆக, ஆரோக்கியத்தை மேம்படுத்தவே பழைய துணிகளைத் தீ வைத்து எரிக்கும் அந்த ஏற்பாடு. இதன்படி போகி அன்று பழைய ஆடைகளைக் கொளுத்திவிட்டு, தைத்திருநாளில் புதிய ஆடைகள் உடுத்தும் பழக்கம் உருவாக இதையும் முக்கியக் காரணமாக சொல்லலாம். ஆக, போகிப் பண்டிகை என்பது சுற்றுச்சூழலின் உயிர்ப்பினைக் கெடுக்கும் நாளாக மாறிப்போனது வருத்தமான விஷயமே. உணர்வுரீதியாக ஆரோக்கியத்துடன் கொண்டாடப்பட்ட நாள்கள் மறைந்து, விஷப்புகையை சுவாசிக்கும் ஒரு நாளாக போகிப் பண்டிகை மாறிப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.
புதிய
போகி
தனக்காக வாழ்வதல்ல மனிதம்; அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளிப்பதுதான் மனிதம்‘ என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.
தனி மனிதனாக நம்மால் இந்தப் பூவுலகுக்கு என்ன செய்யமுடியும் என்பதை யோசித்துச் செயல்படுவோம். போகிப் பண்டிகை என்றால் பிளாஸ்டிக் பொருள்களையும் நாம் உடுத்தும் உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தும் நாள் என்றும் ஒரு பழைய பிளாஸ்டிக் தட்டை மேளம் போல அடித்து சத்தம் எழுப்பும் நாள் என்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தராமல்,போகியின் உண்மையான மகத்துவங்களை சொல்லிக் கொடுப்போம். சுற்றுச்சூழலைச் சிதைக்காத வகையில் பாரம்பர்ய விழாவைக் கொண்டாடுவோம்.
இன்று நமக்கு தேவை இல்லாத பொருள் என்று எண்ணிய அனைத்தையும் எரித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறோம். அதனை விடுத்து வீட்டினை சுத்தம் செய்து தேவையற்ற பொருள்களை தரம் பிரித்து நம்மால் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களை மீண்டும் உபயோகிக்கலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மற்ற பொருள்களை மட்டும் எரிக்கலாம். பயனுள்ள பொருள்களான பாடப்புத்தகங்கள், பழைய பொம்மைகள், உபயோகமான பழைய எலக்ட்ரிக் சாதனப்பொருட்கள் ஆகியவற்றை தேவைப்படுவோருக்கு வழங்கலாம்.
போகி
விழா பழையதை போக்குவது
மட்டுமல்லாமல் அதில் தேவை
அற்றது என்பதையும் உபயோகமாக
மாற்றுவது என்ற மாற்றத்தை
மக்களிடையே வருவிக்க உறுதி
ஏற்போம். எனவே,
இனியாவது
நமது முன்னோரின் மரபு சார்ந்த
விஷயங்களுக்குச் சற்று செவி
மடுப்போம்.
நம்
மரபுக்கான காரணங்களை சிந்தித்து,
ஆரோக்கியம்
காக்கும் பண்டிகையாகப் போகியை
மாற்றுவோம்.
A bilingual blog on everything that matters to our Earth